சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் இன்று உயர்வடைந்து உள்ளது.

Update: 2019-11-09 02:04 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  இதன்பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 16 காசுகள் அதிகரித்து ரூ.75.71க்கும், டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து ரூ.69.67க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்