2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார் - முதலமைச்சர் பழனிசாமி

2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-11-21 11:10 GMT
சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த்  கூறி உள்ளார் என தெரியவில்லை.  2021- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறி உள்ளார். 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்.  ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகே அவரது கருத்துக்கு பதில் கூறுவேன்.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என கொண்டு வந்ததே திமுக தான்.  நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தற்போதும் தொடருகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்