நீர்வரத்து உயர்வு; தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து உயர்வால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2019-11-30 15:54 GMT
நெல்லை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை, கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.  கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது.  இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மழை பொழிவால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.  இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.  செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்