கனமழை; பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூரில் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையால் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூரின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-12-03 01:36 GMT
பெரம்பலூர்,

தமிழகத்தில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்ய தொடங்கியது.  வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியால், மழை தீவிரமடைந்து உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.  பலத்த மழை காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், கனமழையால் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதேபோன்று பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் வடலூர் ஆகிய கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  விருத்தாசலத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்