காவிரி டெல்டா, வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன் - சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் பேட்டி

காவிரி டெல்டா, வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-10 23:45 GMT
பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து தமிழக அரசு இதை அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாக செயல்படுத்த வேண்டும். இதே போன்று சேலம்-சென்னை 8 வழிச்சாலை, நியூட்ரினோ திட்டத்தையும் அமல்படுத்தக்கூடாது. 

தமிழருவி மணியன் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர். அவருடன் எனக்கு நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் அவரை மதிக்கிறேன். அவரை விமர்சித்து புண்படுத்த விரும்பவில்லை. காவிரி ஆற்றில் மாசு கலப்பதாக புகார் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக்கூடாது” என்றார்.

மேலும் செய்திகள்