கொரோனாவுக்காக பொதுமக்கள் மாஸ்க் போட வேண்டும் என்று அவசியமில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவுக்காக பொதுமக்கள் மாஸ்க் போட வேண்டும் அவசியமில்லை என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-10 07:50 GMT
சென்னை,

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேர் உட்பட 8 பேரிடம் நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவில் இருந்து வந்த கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 15 வயது சிறுவன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். கொரோனாவுக்கு பொதுமக்கள் மாஸ்க் போட வேண்டும் என்று அவசியமில்லை.  தமிழகத்தில் ஒருவரைத்தவிர யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்