சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி - அமைச்சர் விஜயபாஸ்கர்

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2020-03-20 10:08 GMT
சென்னை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சேலத்தில் கொரோனா  பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்படும். இந்த ஆய்வகம் உடனடியாக செயல்பட தொடங்கும். கொரோனா பரிசோதனை ஆரம்பமாகும்.  என கூறி உள்ளார்

சென்னை, திருவாரூர், தேனி,திருநெல்வேலி ஆகிய  இடங்களில் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.இது 5-வது கொரோனா பரிசோதனை மையம் ஆகும் .

மேலும் செய்திகள்