கொரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் வீட்டு கண்காணிப்பில் 2,647 பேர்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் வீட்டு கண்காணிப்பில் 2,647 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-03-23 23:30 GMT
சென்னை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானநிலையத்தில் ‘தெர்மல் ஸ்கேனர்’ உதவியுடன் காய்ச்சல், சளி உள்ளிட்ட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருகிற பயணிகளை 28 நாள் வீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு கண்காணிப்பில் உள்ள பயணிகள் குறித்து மண்டல வாரியாக தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னையில் வீட்டு கண்காணிப்பில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றவர்களில் 26 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளனர். 44 பேர் தற்போது வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்ததந்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்