தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-27 13:50 GMT
சென்னை

முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; 144 தடைக்காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டில் இருந்து வெளியே வரலாம்.வீட்டில் இருந்தால் தான் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே மிக மிக முக்கியம்.

கொரோனா ஒரு கொடிய நோய், தனிமைப்படுத்துதலே ஒரே தீர்வு; வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் கண்காணிப்பு; தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக் கூடாது. 

மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; கொரோனா தொடர்பாக மருத்துவ கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது; நோய் அறிகுறி தென்பட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்