கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.2 கோடி வழங்கினார்

கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.2 கோடி வழங்கினார்.

Update: 2020-03-30 23:15 GMT
சென்னை, 

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தோள் கொடுக்கும் விதமாக, பிரதமர் குடிமக்கள் உதவி மற்றும் அவசர நிலை நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.2 கோடி வழங்கி உள்ளார்.

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன், தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1 கோடியும், தனது நன்மக்கள் நலசங்கம் சார்பில் ரூ.25 லட்சமும் வழங்கி உள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, கொரோனா நிவாரண நிதிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தங்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்குவதாகவும், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஏப்ரல் மாத சம்பளத்தில் ரூ.500 வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்