ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-04-10 14:46 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இன்று மாலை தமிழக அரசு வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில்,  கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. உளுந்து, மிளகு, சீரகம், வெந்தயம்  உள்பட 19 பொருட்களை மளிகை தொகுப்பாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 என்ற விலைக்கு இந்த மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்