தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா சோதனை - முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கும் பரிசோதனை

தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-04-21 22:15 GMT
சென்னை, 

சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் அறை, கூட்டரங்குகள் போன்றவற்றில் கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் பணிக்கு வரும் ஒவ்வொருவருக்கும் நேற்று முன்தினம் பிற்பகலில் ‘ரேபிட் டெஸ்ட்’ உபகரணம் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு டிரைவர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் உள்பட 327 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர் 70 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் முதல்-அமைச்சர் உள்பட ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வெளியானது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அங்கு மருத்துவ குழு உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.

மேலும் செய்திகள்