தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2020-05-25 18:07 IST
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது. இதற்கு தலைநகர் சென்னையை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நல்ல பலன் கிடைக்கிறது. ஆனால் எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கட்டுப்பாடுகள் விதித்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனா அடங்க மறுக்கிறது.

 நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் இன்று  ஒரே நாளில் மட்டும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118- ஆக உயர்ந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்