நாட்டு வகை மரங்களை மீட்டெடுக்கும் அரசாணைக்கு 8 வாரங்கள் தடை - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

மற்ற மரங்களை அடையாளம் காண்பது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.;

Update:2026-01-08 22:39 IST

மதுரை,

கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்றி நாட்டு வகை மரங்களை மீட்டெடுக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய அரசாணை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிப்பது போல உள்ளதாக கருத்து தெரிவித்ததோடு, நாட்டு வகை மரங்களை மீட்டெடுக்கும் அரசாணைக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வனத்தில் மற்ற மரங்களை அடையாளம் காண்பது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்