தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களின் விலை பட்டியல் வெளியீடு

தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களுக்கான விலை பட்டியலை தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது.

Update: 2020-06-20 16:42 GMT
சென்னை,

தமிழக பாடநூல் கழகம் பள்ளி மாணவ மாணவியரின் பாட புத்தகங்களுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதன்படி பதினோராம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தவிர மற்ற வகுப்பு பாட புத்தகங்களுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களின் விலை அதிகபட்சமாக 150 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 130 ரூபாய் முதல் 180 ரூபாய் வரையும், பன்னிரெண்டாம் வகுப்பு பாட புத்தகங்கள் அதிகபட்சமாக 180 ரூபாய் வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்