தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை -அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2020-06-27 23:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கன்வென்சன் சென்டரில் நேற்று கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பெஞ்ச்-டெஸ்குகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவமனைகளுக்கு மனிதநேயத்தோடு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை. சூழ்நிலை மாறும்போது எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஆன்-லைன் வகுப்புகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, பொறுத்து இருந்து பாருங்கள், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று அறிவிப்பேன் என்றார்.

மேலும் செய்திகள்