கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! - மு.க ஸ்டாலின் டுவிட்

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-14 14:32 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு! கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மு.க ஸ்டாலின் மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்