தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு: மீண்டும் ஒரே நாளில் 100ஐ தாண்டிய உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-08-08 13:12 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,897பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,07,109லிருந்து 1,08,124 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 5,043 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்  இன்று ஒரேநாளில் 118 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 81 பேர், தனியார் மருத்துவமனைகளில் 37 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் கொரோனாவுக்கு 873 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 6 நாள்களாக கொரோனாவுக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,575-ல் இருந்து 2,32,618 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குண்டமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மேலும் 65,872 பேருக்கும், இதுவரை 30,41,529 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 67,553 மாதிரிகளும், இதுவரை 31,55,619 மாதிரிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்