மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-10 04:08 GMT
சேலம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தற்போது அணையின் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 81 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 43.06 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்