தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-11 13:18 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5,814, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேர் என உட்பட 5,834 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
65,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,834 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,10,046-ல் இருந்து 1,11,054 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் மேலும் 67,492 மாதிரிகளும், இதுவரை 33,60,450 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 6,005 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,44,675-ல் இருந்து 2,50,680 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 1,224 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,159 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 9-வது நாளாக கொரோனா உயிரிழப்பு 100-ஐ தாண்டி பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் 50 வயதுக்குட்பட்ட 16 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 71 பேர், தனியார் மருத்துவமனைகளில் 47 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,350 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,02,815லிருந்து 3,08,649 ஆக உயர்ந்துள்ளது.

1,86,156 ஆண்கள், 1,22,464 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 29 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,810 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்