சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 40 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்தனர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 40 காவலர்கள் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

Update: 2020-08-13 09:53 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தையே எட்டுகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக இருந்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதித்த ஒரு சில நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல்துறையைச் சேர்ந்த 40 காவலர்கள்  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இந்த நிகழ்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர், கொரோனாவில் இருந்து குணமடைந்த இன்னும் பல காவலர்களும் பிளாஸ்மா தானம் அளிக்க தயாராக இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நோயாளிகளை மீட்கும் வகையில் இந்த பிளாஸ்மா தானம் அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்