தமிழகத்தில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Update: 2020-08-31 12:59 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்று 80 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3,824 ஆண்கள், 2,671 பெண்கள் என மொத்தம் 6,495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதிகபட்சமாக சென்னையில் 1,249 பேருக்கு உறுதியானது.  கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 57 பேரும், தனியார் மருத்துவமனையில் 37 பேரும் என 94 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 406 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,427 பேரும், கடலூரில் 483 பேரும், கோவையில் 451 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 பேர் குணம் அடைந்திருந்தனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 721 பேர் இருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மேலும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 91 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த பலி எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  இதனால், மொத்த பாதிப்பு 1.35 லட்சமாக உயர்வடைந்து உள்ளது.  கொரோனாவில் இருந்து மேலும் 6,008 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதுவரை 3.68 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் கூடுதலாக சென்றிருந்தது.  இந்நிலையில், இன்று 6 ஆயிரத்திற்கு சற்று குறைவாக பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்