தொழில்நுட்ப வசதி இல்லாமல் மாணவர்கள் தற்கொலை: மாணவர்களின் அழுத்தத்தை நீக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் - கனிமொழி எம்.பி

தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருவதாக தி.மு.க. எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-09-03 07:50 GMT
சென்னை,

 தி.மு.க. எம்.பி கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்