வடகிழக்கு வங்கக்கடலில் உருவானது, காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-20 05:25 GMT
சென்னை, 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வடகிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்