அக்டோபர் 19: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-19 13:32 GMT
சென்னை,

தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,42,152 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,515 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 10,691 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 885 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,90,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 87,80,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 90,31,696 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 85,130 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 192 மையங்களில் (அரசு - 66, தனியார் - 126) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 38,093 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,17,216 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,095 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,73,688 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,441 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு எண்ணிக்கை விவரம் வருமாறு:-








மேலும் செய்திகள்