குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: வண்ணமயில் வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 4வது நாளான இன்று வண்ணமயில் வாகனத்தில் அம்பாள் பக்தர்களுக்கு கட்சியளித்தார்.

Update: 2020-10-21 16:42 GMT
தூத்துக்குடி,

திருச்செந்தூரை அடுத்த குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இந்த விழாவைக் காணவும், மாலை அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக குலசை தசரா திருவிழாவை கொண்டாட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கோயிலுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தசரா திருவிழாவின் 4வது நாளான இன்று, வண்ணமயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயிலுக்கு வருவதற்காக இன்று ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், முதலில் வந்த 2 ஆயிரம் பேருக்கு பொது தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்