தமிழக காவல்துறையில் மேலும் 4 டி.ஜி.பி.க்கள் பதவி உயர்வு - அரசு உத்தரவு

தமிழக காவல்துறையில் கந்தசாமி, ஷகீல்அக்தர், ராஜேஷ்தாஸ், பி.கே.ரவி ஆகிய 4 கூடுதல் டி.ஜி.பி.க்கள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Update: 2020-10-21 21:15 GMT
சென்னை,

இது தொடர்பாகதமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது-

* கந்தசாமி-நிர்வாகப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள இவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் அதே நிர்வாக பிரிவில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணிபுரிவார். இந்த பதவி புதிய பதவி ஆகும்.

* ஷகீல்அக்தர்-குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் செயலாக்கப்பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றுவார். இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டது.

* ராஜேஷ்தாஸ்-சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள இவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் அதே சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகிப்பார். இந்த பதவியும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது.

* பி.கே.ரவி-இவர் டெல்லியில் ஐ.ஓ.சி. நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவில் ஆலோசகராக உள்ளார். கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள இவர் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர். மத்திய அரசு பணியில் உள்ளார். இவரும் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே உள்ள பணியில் சிறப்பு டி.ஜி.பி.யாக இனி இவர் பதவி வகிப்பார்.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் தற்போது திரிபாதி, சைலேந்திரபாபு, தமிழ்செல்வன், ஜாபர்சேட், கரன்சின்கா, பிரதீப் வி பிலீப், அசுதோஸ்சுக்லா, சுனில்குமார்சிங், சுனில்குமார், சஞ்சய்அரோரா, எம்.கே.ஜா ஆகிய 11 டி.ஜி.பி.க்கள் உள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 டி.ஜி.பி.க்களையும் சேர்த்து தமிழக காவல்துறையில் இனிமேல் 15 டி.ஜி.பி.க்கள் பவனி வருவார்கள். பி.கே.ரவியைப்போல, எம்.கே.ஜா, சஞ்சய்அரோரா ஆகியோரும் மத்திய அரசு பணியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்