பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகளும்...? மீம்ஸ் மாம்ஸ்களும்...

மீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கிய டைனோசர் செய்தி இணையத்தில் மீம்கள் குவிந்து வைரலாகி வருகின்றன.

Update: 2020-10-26 12:27 GMT
சென்னை

பெரம்பலூர் அருகே கிடைத்த உருண்டை போன்ற  முட்டைகள்  டைனோசர்கள் முட்டைகளாக இருக்கலாம் என செய்தி வெளியானலும் வெளியானது. இதற்காகவே காத்திருந்த மீம் கிரியேட்டர்கள் மீம் களை உருவாக்கி கலக்கி வருகிறார்கள். அவர்கள் கையில் டைனோசர் சிக்கினால் சும்மா விடுவார்களா? சமூக வலைதளத்தில் ரசிக்கும் வகையிலான டைனோசர் மீம்களே அதிகம் வலம் வருகின்றன. 

என்ன விளக்கம் கொடுக்கப்பட்டாலும், டைனோசரையும், பெரம்பலூரையும் மீம் கிரியேட்டர்கள் விடுவதாக இல்லை. பெரம்பலூரை ஜுராசிக் வேர்ல்டு அளவுக்கு கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிடாவெட்டு முதல் ஜல்லிக்கட்டு வரை பெரம்பலூர் மக்கள் டைனோசருக்கே முன்னுரிமை கொடுப்பதை போன்ற மீம்கள் வெளியாகியுள்ளன. ஆடு, மாடு இருக்கும் அனைத்து இடங்களிலும் டைனோசரே இடம்பிடித்துள்ளது.

பேருந்து செல்லும் போது, இடையில் டைனோசர் ஓடுவது உள்ளிட்ட வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. பெரம்பலூர் மக்கள் சாதாரணமாக டைனோசருடன் வலம் வருவது போல் இந்த மீம்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டைனோசர் டெம்பிலேட்-களுக்கும் அதிக மவுசு. அவர்கள் அதிகம் கூகுளில் தேடுவதும் இதுவாகதான் இருக்கும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற மீம்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.



மேலும் செய்திகள்