இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம் - கமல்ஹாசன் டுவீட்
மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம் என பதிவிட்டுள்ளார்.