பழைய இரும்பு கடையில் புதிய பாட புத்தகங்கள் இருந்த விவகாரம்: அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவு

பழைய இரும்பு கடையில் புதிய பாட புத்தகங்கள் இருந்த விவகாரம் தொடர்பாக, அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-29 07:14 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்தது. 

இதையடுத்து. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 2019 -20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 5,000க்கும் மேற்பட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வருவாய்த் துறையினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து,கடை உரிமையாளர் பெருமாள்சாமியை கைது செய்தனர்.

இந்நிலையில் பழைய இரும்பு கடையில் புதிய பாட புத்தகங்கள் இருந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்