10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை தொடக்கம்

10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை தொடங்கியது.

Update: 2020-12-31 03:20 GMT
கோப்புப்படம்
மேட்டுப்பாளையம், 

மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரனோ பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளின் அடிப்படையில் தனியார் கட்டுப்பாட்டில் வார இறுதி நாட்களில் மலை ரயில் சேவை இயங்கி வந்தது. சாதாரணமாக மலை ரெயிலில் செல்ல இருந்த கட்டணத்தை விட சிறப்பு ரெயிலில் செல்ல பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் வழக்கமான கட்டணத்தில் மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. அடர்ந்த வனப்பகுதி வழியாக, மலைப்பாதையில் இந்த ரெயில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடனும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடனும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்