தமிழகத்தில் ஜன.2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஜன.2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-31 11:03 GMT
சென்னை,

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும், ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆகையால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசிக்கு தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜன.2ஆம் தேதி முதல் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்  கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கவும் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும் செய்திகள்