தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Update: 2021-02-25 06:08 GMT
சென்னை,

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின.

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வுக்கு தயாராகுவதற்கு கால அவகாசம் இருக்குமா? என்பதெல்லாம் மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தன.

கடந்த 17 ஆம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்களும் அசிரியர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். 10,11 மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவ குறித்துபள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தின் வந்தனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுவதாக சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அமுதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்