போலி நிறுவனங்கள் மூலம் ரூ.423 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி

போலி நிறுவனங்கள் மூலம் ரூ.423 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி 3 பேர் கைது.

Update: 2021-03-11 21:07 GMT
சென்னை, 

வேலூரைச் சேர்ந்த பழைய இரும்பு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்கும் டீலர் ஒருவர், பல கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை புறநகர் பகுதி மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தின் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இரும்பு டீலர் உள்பட 3 பேர் 44 போலி நிறுவனங்கள் வாயிலாக போலி ரசீதுகள் மூலம் ரூ.423.27 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடன் வழங்கியதன் மூலம் ரூ.57.62 கோடியும் மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள், எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல் சென்னை புறநகர் பகுதி ஜி.எஸ்.டி. ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்