உத்தமபாளையத்தில் தேவர் சிலை அவமதிப்பு பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் தேவர் சிலை அவமதிப்பு பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்.

Update: 2021-04-07 22:42 GMT
தேனி, 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று மாலை மர்மநபர் ஒருவர் அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேவர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், தேவர் சிலையை அவமதிப்பு செய்த மர்மநபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பார்வர்டு பிளாக் கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்