தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-10 09:25 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை நிலவு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் வெப்பநிலை மேலும் அதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்