நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகள்

நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகள் தணிக்கை வாரியம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-04-21 20:43 GMT
சென்னை, 

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில், முடிதிருத்துவோரை அவதூறாக சித்தரிக்கும் சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘மண்டேலா’ படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது, காரில் ஏற அருகதை இல்லை என காரின் பின்னே ஓடிவரச் சொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளும் வசனங்களும் மருத்துவர் சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. எனவே இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டும், சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், திரைப்பட தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குனர் மடோனே அஸ்வின் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்