ரூ.400 முதல் ரூ.1,000 வரை விலை நிர்ணயித்து தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்துக்கு வழிவகுப்பதா? சுகாதார அமைச்சகம் பதில் அளிக்க ப.சிதம்பரம் வலியுறுத்தல்

ரூ.400 முதல் ரூ.1,000 வரை விலை நிர்ணயித்து தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்துக்கு வழிவகுப்பதா? சுகாதார அமைச்சகம் பதில் அளிக்க ப.சிதம்பரம் வலியுறுத்தல்.

Update: 2021-04-26 03:03 GMT
சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இரண்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஒரே மாதிரியான தடுப்பூசிகளுக்கு 5 வகையான விலையை நிர்ணயித்துள்ளனர். ஆனால் அரசு அமைதியாக இருக்கிறது. இந்த நேரத்தில் கட்டாய உரிமம் என்பது போன்ற வரைமுறையை அமல்படுத்த வேண்டும். ‘எல்1', 7எல்2' போன்ற உரிமங்கள் தான், அந்த மருந்தின் உண்மையான உற்பத்தி விலையையும், சரியான லாபத்தையும் வெளிக்கொணரும்.

ரூ.150 என்ற விலையில் தடுப்பூசி விற்பனை செய்தபோது, அந்த 2 தடுப்பூசி தயாரிப்பாளர்களும் சிறிய அளவில் லாபம் சம்பாதிப்பார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது ரூ.400 முதல் ரூ.1,000 என்ற அளவில் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு, லாபத்துக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் அரசும், விரும்புவதாக இருக்கலாம். இதுகுறித்து சுகாதார அமைச்சகம் பதில் அளிக்குமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்