அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

அரசு பஸ்களில் திருநங்கைகளும் இலவச பயணம் குறித்து விரைவில் முடிவு மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு.

Update: 2021-05-09 00:21 GMT
சென்னை, 

சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் கட்டணமில்லாமலும், பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், ஊடகவியலாளர் இந்துஜா ரகுநாதன், “பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணத் திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கருணாநிதி காலந்தொட்டே தி.மு.க. அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்