தமிழக ஆளுநருடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.

Update: 2021-05-15 12:32 GMT
கோப்பு படம்
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையாக முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நிவாரண நிதியாக ஆளுநர் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பிற விசயங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்