கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து தேவை அதிகரித்துள்ளதாக தகவல்

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-06 11:06 GMT
சென்னை,

கொரோனா தொற்று பாதிப்பை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் கருப்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 518 ஆக இருந்தது. இது தற்போது 847 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், இதன் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அம்போடெரிசின் பி மருந்துக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும், தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 30 ஆயிரம் மருந்துகளை ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.  

மேலும் செய்திகள்