நீலகிரி, கோயம்புத்தூா், உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-21 09:27 GMT
சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மேலும் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

ஜூன் 22: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். எஞ்சிய மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய திருப்பூா், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேகமான இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.

ஜூன் 23: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்