தீய சக்திகளிடம் கவனமாக இருக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தீயசக்திகளிடம்ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
சென்னை,
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார் ஜெயலலிதா. சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அரசியலில் சிலர் பரம்பரை பரம்பரையாக பதவியை அனுபவித்து வருகிறார்கள்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யேசுபிரான் போதித்த போதனகள் இன்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும் . ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீய சக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்” என்றார்.
மேலும் குட்டிக்கதை ஒன்றை கூறிய எடப்பாடி பழனிசாமி, “ ஆட்டுத்தோலை போர்த்தி வந்த ஓநாய்களை போல வருவோரிடம் சிறுபான்மை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீயசக்திளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக பாடுபடும் இயக்கம்” என்றார்.