ஜூன் 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-21 16:36 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 29 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 61 ஆயிரத்து 329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 15 ஆயிரத்து 281 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 37 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 189 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 83
செங்கல்பட்டு - 310
சென்னை - 439
கோவை - 891
கடலூர் - 189
தர்மபுரி - 116
திண்டுக்கல் - 78
ஈரோடு - 795
கள்ளக்குறிச்சி - 147
காஞ்சிபுரம் - 103
கன்னியாகுமரி - 133
கரூர் - 101
கிருஷ்ணகிரி - 167
மதுரை - 144
நாகை - 120
நாமக்கல் - 314
நீலகிரி - 166
பெரம்பலூர் - 37
புதுக்கோட்டை - 86
ராமநாதபுரம் - 49
ராணிப்பேட்டை - 132
சேலம் - 511
சிவகங்கை - 74
தென்காசி - 51
தஞ்சாவூர் - 388
தேனி - 77
திருப்பத்தூர் - 71
திருவள்ளூர் - 197
திருவண்ணாமலை - 194
திருவாரூர் - 103
தூத்துக்குடி - 99
திருநெல்வேலி - 45
திருப்பூர் - 458
திருச்சி - 251
வேலூர் - 87
விழுப்புரம் - 115
விருதுநகர் - 106

மொத்தம் - 7,427

மேலும் செய்திகள்