கன்னியாகுமரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை திடீர் சாவு

கன்னியாகுமரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை திடீர் சாவு.

Update: 2021-06-22 18:06 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் உடையார்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய ஒரு காட்டு யானையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் உடலில் இருந்த புண்களில் மருந்து போட்டு சுத்தப்படுத்தினர். தொடர்ந்து அதை குணப்படுத்த தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முழுமையாக முடிந்து அது பூரணமாக குணமடைந்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக நேற்று முன்தினம் இரவு முழுவதும் யானையை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் யானை திடீரென இறந்தது. உடற்கூராய்வுக்கு பின்னர் வனத்துறையினர் அந்த பகுதியில் பொக்லைன் எந்திரத்தால் பெரிய பள்ளம் தோண்டி யானையின் உடலை புதைத்தனர்.

மேலும் செய்திகள்