மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்திற்கு முன்னரே கீழடியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர்-அமைச்சர் ஏ.வ.வேலு
மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்திற்கு முன்னரே கீழடியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.;
சென்னை
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியக கட்டிட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
கீழடியில் அருங்காட்சியகம் 60 சதவீத பணிகள் முடிந்து இருக்க வேண்டும், ஆனால் 17 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி நேரில் ஆய்வு செய்கிறோம்; பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!”
மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்திற்கு முன்னரே கீழடியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர்; 31,000 சதுர அடியில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது என கூறினார்.