கூடங்குளம் 5-வது அணு உலை பூர்வாங்க பணிகளை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-07-03 00:42 GMT
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

எனவே கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் 1 மற்றும் 2 ஆகிய அணு உலைகளை தவிர்த்து, 3, 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் தற்போது துவங்கப்பட்டுள்ள 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகளையும் மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்தகைய பணிகளை நிறுத்துவதற்கான 
அனைத்து முயற்சிகளில் தமிழக அரசும் இணைந்து நிற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்