தமிழகத்தில் கொரோனா விதிமீறல் அபராதமாக இதுவரை ரூ.67.17 கோடி வசூல் - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.67.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-03 06:32 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை மீறும் கடைகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மீது பொதுசுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் அணியாதவர்கள், சமூக விலகலைகட்டிப்பிடிக்காதவர்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் வசூலித்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா 2-வது அலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 37 லட்சத்து 71 ஆயிரம் பேரிடம் இருந்து இதுவரை 67 கோடியே 17 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் கொரோனா முதல் அலையின் போது கொரோனா விதிகளை மீறியதாக 22 லட்சத்து 99 ஆயிரம் நபர்களிடம் இருந்து 52 கோடியே 78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்