தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: மேலும் 72 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-04 13:59 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,96,287 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 72 பேர் (அரசு மருத்துவமனை - 54 பேர், தனியார் மருத்துவமனை - 18 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மேலும் 4,382 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,27,988 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35,294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 445 பேருக்கும், ஈரோட்டில் 349 பேருக்கும், சேலத்தில் 245 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், திருப்பூரில் 225 பேருக்கும், சென்னையில் இன்று மேலும் 222 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்