மதுரையை எழில்மிகு நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரையை எழில்மிகு நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-07 17:08 GMT
மதுரை,

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மதுரை மத்திய தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்ததோடு, சிம்மக்கல் கந்தசாமி பிள்ளை காம்பவுண்டு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அவர் நேரில் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் மதுரை மேலவாசலில் நடந்த மாபெரும் தூய்மைப்பணிகளையும் அவர் துவக்கி வைத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மதுரையை எழில்மிகு நகரமாக மாற்ற தூய்மை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் மாநகராட்சி எடுக்கும் முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்